துர்நாற்றமடிக்கும் குப்பைகளை தாராபுரம் நகராட்சி அலுவலகத்திற்குள் கொண்டுவந்து வைத்தவர்கள் ஆணையரிடம் வாக்குவாதம் பரபரப்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 June 2023

துர்நாற்றமடிக்கும் குப்பைகளை தாராபுரம் நகராட்சி அலுவலகத்திற்குள் கொண்டுவந்து வைத்தவர்கள் ஆணையரிடம் வாக்குவாதம் பரபரப்பு.


தாராபுரம் நகராட்சி 7வது வார்டுக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் சிலர் தங்களது பகுதியில் செயல்பட்டுவரும் நுண்னுயிர் உரமையத்தில் இருந்து வரும் துர் நாற்றத்தால் இங்கு குடியிருக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் இந்த நகராட்சி நுண்ணுயிர் உர மையத்தை அப்புறபடுத்த வேண்டும் என வலியுருத்து துர்நாற்றமடிக்கும் குப்பைகளை சாக்கில் எடுத்துவந்து நகராட்சி அலுவலகத்தின் நடுவே வைத்துவிட்டு நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 


ஏற்கனவே கடந்த நகர்மன்ற கூட்டத்தின் பொழுது 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் யூசுப் என்பவர் குப்பைகளை கொண்டுவந்து நகர்மன்ற கூட்ட அரங்கில் கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் இந்நிலையில் இன்று அவரது வார்டு பகுதியை சேர்ந்த சிலர் அதேபோல் செயல்பட்டது அதிகாரிகளை அதிர்சியடைய செய்த து. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டபொழுது கடந்த 2018ம் ஆண்டுமுதல் 5ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த நகராட்சி நுண்ணுயிர் உரமையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கபடும் மக்கும் குப்பைகளை இயந்திரங்கள் மூலம் 3ஆயிரம் மெட்ரிக்டன் வரை அரைத்து உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கிவருவதாகவும் தற்பொழுது திடீரென இதற்கு எதிர்ப்பு வந்துள்ளதால் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் அலோசனை செய்து தக்க தீர்வு காணப்படும் என்றார்.


மேலும் கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர்களின் ஒவ்வொரு  குடும்பத்தில் ஒருவராவது நகராட்சி துப்பரவு பணியாளராக உள்ள நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் குப்பையை நகராட்சி அலுவலகத்தில் கொண்டுவந்து வைத்தது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது 

No comments:

Post a Comment

Post Top Ad