ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இரயில் விபத்தில் பலியான வர்களுக்கு திருப்பூரில் அஞ்சலி! மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூரில் தினமலர் நாளிதழ் சார்பில் "ஈரமான நெஞ்சங்கள், இணையும் கீதாஞ்சலி!" நிகழ்வு நடைபெற்று, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் எம்.எல்.ஏ, வடக்கு மாநகர செயலாளரும் மேயருமான ந.தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணைச் செயலாளருமான டி.கே. டி. மு.நாகராசன், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, 2 வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், மாமன்ற கல்வி குழு தலைவர் திவாகர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment