இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூரணகுதி தீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாகுதி, கும்பம் புறப்பாடு நடந்து ஆலயம் வலம் வந்தது. கும்பாபிஷேகம் பின்னர் கோவில் ஸ்தூபி, கோபுரம், கோவில் மூலஸ்தான தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மங்களாம்பாளையத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் துர்க்்கையம்மனுக்கு புதிதாக கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மஹாமண்டபத்துடன் கூடிய நூதன ஆலயம் அமைத்து விநாயகர், துர்க்கை, முனியப்பசாமி மற்றும் துர்க்கைபிடாரி அம்மனுக்கு நூதன விக்கிரபிரதிஸ்டை செய்து மகா கும்பாபிஷேக நிறைவு பெற்றது.
விழாவில் மணக்கடவு, காளிபாளையம், குமாரபாளையம், மீனாட்சிபுரம், கொளத்துப்பாளையம், கரையூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment