திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நடைபெற இருந்தது இதற்காக கவுன்சிலர்கள் வந்து கொண்டிருந்தனர் அப்போது 24 வது வார்டை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் குடிநீர் முறையாக விநியோகம் செய்ய வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர் இதை அடுத்து அந்த வார்டு கவுன்சிலர் லீலாவதி பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பொதுமக்கள் ஆத்திரத்தில் கவுன்சிலர் லீலாவதியை மரியாதை குறைவாக பேசியதாக தெரிகிறது இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது அந்த வார்டை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பொதுமக்களை வேண்டுமென்றே திரட்டி வந்ததாக லீலாவதி உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்கள் இதனால் அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் லீலாவதி கதிர்வேல் ஆகியோருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தேவராஜனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கவுன்சிலர் தேவராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலரை பார்த்து ஜாதி பற்றி பேசியதாக தெரிகிறது இதனால் ஆத்திரமடைந்த இ கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து நகராட்சி தலைவர் குமார் மற்றும் போலீசார் இரு தரப்பினர் இடையே பேசி சமரசப்படுத்தினார்கள் பின்னர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் தொடங்கியது நகர மன்ற தலைவர் குமார் தலைமை தாங்கினார் கமிஷனர் அப்துல் ஹாரிஸ் துணைத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது அப்போது கவுன்சிலர் தேவராஜன் ஜாதியை பற்றி பேசியதாக கூறி துணைத்தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் ஐந்து பேரும் கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் பின்னர் ஐந்து பேரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர் ஒரு சில கவுன்சிலர்கள் மட்டும் தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கை தொடர்பாக பேசினார்கள் திமுக கவுன்சிலர் முருகசாமி பேசும்போது நானும் நகராட்சி தலைவரும் திமுகவாக இருக்கும் நிலையிலும் எனது வீட்டிற்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்றும் அதிமுக பதவியில் இருந்த காலத்தில் முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது என்றும் கூறினார்.
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் அப்போது அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்.
No comments:
Post a Comment