ஆறு போல் ஓடும் சாக்கடை கழிவு நீர் சாக்கடை கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பல்லாயிரக்கணக்கானமக்கள் அவதி!. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 June 2023

ஆறு போல் ஓடும் சாக்கடை கழிவு நீர் சாக்கடை கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பல்லாயிரக்கணக்கானமக்கள் அவதி!.


திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் 11 வது வார்டு 15 வேலம்பாளையம்  இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் பனியன் கம்பெனிகள் உள்ளது ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் முக்கிய சாலையாகும் இந்த மணீஸ் தியேட்டர் ரோடு, இந்த ரோட்டில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் சாக்கடை நீர் பிளாஸ்டிக் பொருட்களால் அடைத்துக் கொண்டு அடிக்கடி கால்வாய் நிறைந்து வெளியே தார் ரோடுகளில் சாக்கடை நீர் வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனை நீண்ட கால பிரச்சனை இந்த கால்வாயை அகலப்படுத்த ஆழப்படுத்த புதிய கால்வாய் கட்டும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு தற்போது செய்து வரும் நிலையில் இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் சாக்கடை தண்ணீர் ரோடுகளில் வெளியேறி குளம் போல் காட்சியளிக்கிறது.


வேலம்பாளையம் பகுதிகளிலிருந்து வெளிவரும் மக்கள் வாகனங்களில் வருவதற்கும் நடந்து வருவதற்கும் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது இதனால் மக்களுக்கு  நோய் தொற்று பரவும் நிலை உள்ளது இந்த சாக்கடை பணிகள் நிறைவு பெற்றாலும் இந்த சாக்கடை கழிவு நீர் அவிநாசி ரோடை கடந்து செல்லும் பகுதிகளில் ஆகிரமிப்பு உள்ள நிலையில் இந்த கழிவு நீர் சரளமாக செல்லுவதற்கு மிகவும் தடையாக உள்ளது மழைக்காலங்களில் இதைவிட பத்து மடங்கு அளவு கழிவு நீர் வரும் இந்த கழிவு நீர் சாக்கடை ஆக்கிரப்பு சாக்கடை கால்வாய் இடங்களை மீட்டு எடுக்கப்பட்டால்  மட்டுமே பல ஆண்டுகளாக 15 வேலம்பாளையம் பகுதி மக்களுக்கு இருக்கும் இந்த பூதாகரமான பிரச்சனை தீரும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 


பறிக்கப்பட்ட சாக்கடை நிலங்களை மீட்டெடுக்குமா திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்?

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

No comments:

Post a Comment

Post Top Ad