தாராபுரத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்.டி.ஓவிடம் மனு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

தாராபுரத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்.டி.ஓவிடம் மனு.


திருப்பூர்  தாராபுரம் அடுத்த சின்னக்காம்பாளையம் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கோழிப்பண்ணை நடத்த அனுமதி வழங்க கோரி ஆர்.டி.ஓ செந்தில் அரசனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதி சின்னக்காம்பாளையம் பேரூராட்சி இப்பகுதியை சுற்றி 10க்கும் மேற்பட்ட சின்ன சிறு கோழிப்பண்ணைகள் குடிசை தொழிலாக நடத்தி விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருகி வருகிறோம்.

மேலும் கோழி பண்ணை விவசாயிகளுக்கு பிரதான தொழிலாக உள்ளது.இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பிழைப்பை நடத்தி வருகிறோம்.இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தாய்க்கோழிப்பண்ணையால் எங்களுக்கு எந்த ஒரு ஈக்கள் தொல்லையோ சுகாதார சீர்கேடோ ஏற்படவில்லை.


தோட்டங்களில் வசிக்கும் எங்களுக்கும் எந்தஒரு இடையூறும் சுகாதாரக் கேடும் இல்லை. மேலும் எங்கள் விவசாயத்திற்கான இயற்கை உரமாகிய பெற்று மண்வளத்தை மேம்படுத்தி நல்ல முறையில் விவசாயம் செய்து பயனடைந்து வருகிறோம், நாங்கள் விளைவிக்கும் மக்காச்சோளம், கம்பு, வெள்ளைச் சோளம் மற்றும் பிற தானியங்கள் ஆகியவற்றை எந்த ஒரு சிரமமும் இன்றி அன்றைய சந்தை மதிப்பிலேயே இந்நிறுவனத்திற்கு விற்று பயனடைந்து வருகிறோம்.தாராபுரம் வட்டத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பஞ்சபட்டி, சென்னக்கால் பாளையம், சின்னக்காம்பாளையம், சீலநாயக்கன்பட்டி புது காலனி உள்ளிட்ட கிராமங்களில் பண்ணைகள் உள்ளன.


இந்நிறுவனத்தின் தாய் கோழி பண்னையில் இருந்து உற்பத்தியாகும். முட்டைகள் மற்றும் குஞ்சுகளாக கோழி வளர்ப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் கோழிப்பண்ணையாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டால் எங்கள் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். கோழிப்பண்ணை நடத்துவதால் ஊர் பொதுமக்கள் ஆகிய எங்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லை அவர்கள் சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் கோழிப்பண்ணையை நடத்தி வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ செந்தில் அரசன் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad