திருப்பூர் மாநகராட்சி 1வதுமண்டலம் பத்தாவது வார்டு சௌபாக்யா நகரில் பழைய சாக்கடையில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த பழைய சாக்கடையில் மேற்பகுதி புதிதாக சிமெண்ட் பூச்சு பூசப்பட்டுள்ளது சாக்கடையின் உள்ளே தளத்தில் இருக்கும் சாக்கடை கழிவு நீர் சேறுகளை முற்றிலும் அப்புறப்படுத்தாமலே அதன் மேலேயே சிமெண்ட் கலவையை போட்டு தளம் அமைக்கிறார்கள் இதனால் தரம் இல்லாத சாக்கடை தளம் அமையும் சாக்கடை சேறுகளை அப்புறப்படுத்திவிட்டு தளம் அமைக்க வேண்டும் என்று பணி நடக்கும் இடத்தில் இருந்த ஒப்பந்ததாரிடம் நெற்றிக்கண் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இப்படித்தான் போடுவோம் என்று ஒப்பந்ததாரர் கூறுகிறார் இது போன்ற தரமற்ற பணிகளால் மக்களின் வரிப்பணம் சாக்கடை சேறில் கரைந்து போகிறது மேலும் உடனிருந்து கண்காணிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரியோ, அவரின் உதவியாளரோ பணி நடக்கும் இடத்தில் இல்லை இந்த ஒப்பந்ததாரர் மீதும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் இது பற்றி மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையாளரிடமும் புகார் மனு கொடுக்க உள்ளதாக நெற்றிக்கண் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் கூறினர்.
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment