நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகளை சிறுமைப்படுத்தும் பாஜக எம்பி பிரிஷ் பூஷன் சிங்கை கைது செய்ய கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி திருப்பூரில் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 June 2023

நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகளை சிறுமைப்படுத்தும் பாஜக எம்பி பிரிஷ் பூஷன் சிங்கை கைது செய்ய கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி திருப்பூரில் ஆர்ப்பாட்டம்!


உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் பெரும் பங்கு விளையாட்டு வீரர்களுக்கு உண்டு அந்த வகையில் மல்யுத்த வீரர்கள் தங்கள் நாட்டுக்காக போட்டியில் உயிரை பணயம் வைத்து பல்வேறு நாட்டின் மல்யுத்த வீரர்களுடன் மோதி பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்து பெருமை சேர்க்கின்றனர் ஆனால் அவர்கள் நிலைமையோ மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது என்பது உண்மை இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு  எதிரான பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்பி பிரிஷ் பூஷன் சிங்கை கைது செய்து நீதி வழங்க வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனைகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு ஆதரவாக பாஜக எம்பி பிரிஷ்பூஷன் சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி திருப்பூர் இரயில் நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் சார்பாக  திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் இதயத்துல்லா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார், மாநில செயளாளர் அபூபக்கர் சித்திக் , மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சஹானா WIM ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர், வடக்கு மாவட்ட தலைவர் பாபு, தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மன்சூர் அஹமத் கட்சியின் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் அப்துல் சத்தார் நன்றியுரை ஆற்றினார் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்   ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைத்திட வேண்டி பாஜக எம்பி பிரிஷ் பூஷன் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

No comments:

Post a Comment

Post Top Ad