திருப்பூர் பனியன் பஜார் தீ விபத்தில் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகளை மீண்டும் சந்தித்தார் திருப்பூர் மேயர்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2023

திருப்பூர் பனியன் பஜார் தீ விபத்தில் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகளை மீண்டும் சந்தித்தார் திருப்பூர் மேயர்!


திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள காதர் பேட்டை அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பனியன் வியாபாரிகள் தகரக் கொட்டகைகளை அமைத்து பனியன் பஜார் என்ற பெயரில் பனியன் வியாபாரம் செய்து வந்த நிலையில் கடந்த 23-6-2023 அன்று இரவு 9 மணிக்கு மேல் திடீரென தீப்பற்றிய நிலையில் பனியன் பஜாரில் இருந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட கடைகளும் பனியன் துணிகளும் எரிந்து சாம்பல் ஆகி வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை  திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்  சந்தித்து  வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினார்.


அப்போது அவர்கள் மேயரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர் அந்த மனுவில் மின் கசிவு  காரணமாக பனியன் பஜாரில் 50 க்கும் மேற்பட்ட கடைகளும் அதற்குள் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகளும் ஜெனரேட்டரும் தீயில் எரிந்து நாசமாகியது இதனால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம் சுமார் மூன்று கோடிக்கும் மேலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இங்கிருந்த ஒரு வீடு  நாசமாகிவிட்டது எனவே எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மீண்டும்  தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.


இந்த மனுவை பெற்றுக் கொண்டமேயர் தினேஷ் குமார் இதன் தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார் இவருடன் துணை மேயர் பாலசுப்ரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் செந்தூர் முத்து, திவாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்.

No comments:

Post a Comment

Post Top Ad