அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு,உறுதிமொழி... - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு,உறுதிமொழி...

 


தாராபுரத்தில் போதை மற்றும் குடிப்பழக்கத்தின் விளைவுகளையும் அதனால் ஏற்படும் தீமைகளை பற்றி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு, உறுதிமொழி ...


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு போதை பொருளால் ஏற்படும்  தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழி எடுத்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.


அந்த வகையில் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி முதல்வர் திருமதி பத்மாவதி தலைமையில், சிறப்பு விருந்தினராக வட்ட சட்டப் பணி குழு தலைவர்/ சார்பு நீதிபதி திரு.தர்மபிரபு சிறப்புரை ஆற்றினார்.. இதில் மாணவ மாணவிகள் போதை வஸ்துக்கள் சிகரெட் மற்றும் மதுக்களை அருந்த வேண்டாம் இதை அருந்துவதால் நாமும் நாம் சுற்றிவிட்டுள்ள நபர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் இதன் மூலமாக பல்வேறு நோய்கள் மூலம் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் ஆகவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மாணவ மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்...


உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் ஹார்ஸ் துபே ஆங்கில விரிவுரையாளர் நன்றி உரை ஆற்றினார் இதில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரிய-ஆசிரியைகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad