இவர் கடந்த மூன்று வருடங்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்ட ரங்கசாமி கோவையில் உள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரங்கசாமி வழக்கம் போல் நேற்று பணிக்கு செல்வதற்காக காலை குளிப்பதற்கு குளியலறைக்கு சென்றார். அதன்பின்னர் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் கதவை உடைத்துப் பார்த்தபோது குளியல் அறையில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரங்கசாமியை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஓராண்டுகளில் வனச்சரகராக பதவி உயர்வு பெறவிருந்த நிலையில் பணியில் இருந்த வனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment