திருப்பூரில் நச்சு வாயு வெளியேறியதால் குழந்தைகள் பொதுமக்கள் வாந்தி மயக்கம் எம் எல் ஏ கலெக்டர் விரைந்து சென்று பாதிக்கப் பட்டோருக்கு உதவினர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 June 2023

திருப்பூரில் நச்சு வாயு வெளியேறியதால் குழந்தைகள் பொதுமக்கள் வாந்தி மயக்கம் எம் எல் ஏ கலெக்டர் விரைந்து சென்று பாதிக்கப் பட்டோருக்கு உதவினர்.


திருப்பூர் வெங்கமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான சலவை ஆலை இயங்கி வருகிறது இந்த சலவை ஆலையில்  கழிவுநீரை சுத்தகரிக்காமல் வைத்திருந்தால் கழிவு நீரிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் அந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட்ட பெரியவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டது இது குறித்து அந்த பகுதி மக்கள்  மாநகராட்சி நிர்வாகத்தில் தெரிவித்தனர் இதை தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் அப்பகுதியில் உடனடியாக குழந்தைகளுக்கு பெரியோர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் குறித்து அந்த திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோரை மருத்துவ பரிசோதனைக்காக தனது கார் மூலம் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் கலெக்டர் கிறிஸ்துராஜ் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் கிரியப்ப னவர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சலவை ஆலையில் நேரடி ஆய்வு செய்தனர் ஆலையின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் கிரியப்பனவர் நிருபர்களிடம் கூறியதாவது நச்சுப் புகையால் பாதிக்கப்பட்ட அனைவரையும் பரிசோதனை செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அவர்கள் உடல் நலம் தற்போது வரை சீராக உள்ளது இந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுருத்தப் ப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட ஆலையில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் ஆய்வு அறிக்கை வந்தவுடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வு முடிவுகள் வரும் வரை ஆலையை தற்காலிகமாக செயல்பட தடைவிதித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறுத்தினர்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து சலவை ஆலையை உடனடியாக மூட கலெக்டர் கிறிஸ்துராஜ் இஆப உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad