திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் பத்தாவது வார்டு சௌபாக்யா நகரில் பழைய சாக்கடை புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த சாக்கடைனுள் உள்ள தளம் அமைக்கும் பணியில் சாக்கடைக்குள் இருந்த கழிநீர் சேறுகளை முற்றிலும் அகற்றாமலேயே சேற்றின் மேல் சிமெண்ட் கலவையை போட்டு தளம் அமைக்கிறார்கள்.
இதை தமிழர் குரல் செய்தி தளத்தில் செய்தியாக பதிவிட்டது, இந்த செய்தியின் எதிரொலியாக திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையாளர் உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து சாக்கடை பணிகளை நிறுத்தினர், ஒப்பந்ததாரரிடம் சேற்று மண்களை அகற்றிவிட்டு பணிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதனால் தரமில்லாத சாக்கடை பணிகள் நிறுத்தப்பட்டது, இன்று சேற்று மண்களை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, சாக்கடை பணிகளை தடுத்து நிறுத்திய தமிழக குரல் செய்தி தளத்திற்கு நெற்றிக்கண் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment