திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டலம் ,4 வது வார்டில் மூலதன மானிய நிதி ( CGF) 2022-23 -ன் கீழ் ரூ-331-45 இலட்சம் மதிப்பீட்டில் தோட்டத்துப்பாளையம் பிரதான சாலையில் RCC மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுதல் பணிகள் மற்றும்16 வது வார்டு மற்றும் 17வது வார்டு பகுதிகளில் மூலதன மானிய நிதி 2022 - 23 (CGF ) திட்டத்தில் ரூ-3.79 கோடி மதிப்பிலான மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுவதற்கான பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றும் மேயர் ந.தினேஷ்குமார், மாநகர ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப, திமுக பகுதி செயலாளர் ஜோதி, மாநகர துணை செயலாளர் ராமசாமி, மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், திமுக வட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் மயில்சாமி, திமுக வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோபால்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment