தாராபுரம் அருகே பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 16 பேர் படுகாயம்.. இதில் படுகாயம் அடைந்த இரண்டு நபர்கள் கோவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..
தாராபுரம்,ஜுலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த ஆதிபராசக்தி பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுவாக இணைந்து ஆறு வேன்களில் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு அங்கிருந்து கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு செல்வதற்காக வேனில் சென்று கொண்டிருந்த பொழுது திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையான தாராபுரம் அருகே உள்ள வடபருத்தியூர் அருகே வந்து கொண்டிருந்த ஆறு வேன்களில் ஒரு வேனின் ஓட்டுனர் விஜயன் (30) என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் தலைகீழாக பாய்ந்தது இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர்.இதனால் கோவை ஈஷா யோகா மையத்திற்கு செல்ல இருந்த பக்தர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு பொது மக்களின் உதவியோடு காயம் அடைந்த தங்களின் உறவினர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் மூலம் கொண்டு வந்து சேர்த்தனர் இதைத்தொடர்ந்து காயம் அடைந்த பக்தர்களுக்கு தாராபுரம் அரசு மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர் பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த வேன் ஓட்டுநர் விஜயன் மற்றும் கவிதா (40) ஆகிய இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment