திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியினர் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று கொண்டுள்ளது திருப்பூர் வடக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு மாவட்ட தொகுதி செயலாளர் செந்தமிழ் செல்வராஜ், மாவட்ட செயலாளர் பழ. சிவகுமார் ஆகியோர் வழிகாட்டுதல்பேரில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டது இந்த முகங்களில் வடக்கு தெற்கு தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 1-சொக்கனூர் பேருந்து நிறுத்தத்தில் நித்தியானந்தம் கிளைச் செயலாளர் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏற்பாட்டிலும், 2-கணக்கம்பாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகில் தே.சிவசங்கர் தொகுதி செய்தி தொடர்பாளர் மற்றும் இரா.சிவசங்கர் வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ஆகியோர் ஏற்பாட்டிலும்,
3-தோட்டத்து பாளையம் நான்காவது வட்டத்தில் தொகுதி இணைச் செயலாளர் சின்னராசு மற்றும் ஆனந்த் தொகுதி துணை தலைவர் ஆகியோர் ஏற்பாட்டிலும், 4-பாளையக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் முத்து செந்தில்வேல் தகவல் தொழில்நுட்ப பாசறை மற்றும் 32 வது வார்டு செயலாளர் ரவி ,வார்டு தலைவர் ராபட் ஆகியோர் ஏற்பாட்டிலும், உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்றது இந்த முகாம்களில் பொதுமக்கள் நாம் தமிழர் கட்சியில் தங்களை உறுப்பினராக சேர்த்துக் கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment