தாராபுரத்தில் 2000 பெண்கள் கலந்து கொண்டு பவளக்கொடி சார்பாக கும்மியாட்டம் நடைபெற்றது.. குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் கண்டு களித்தனர்..
தாராபுரம், ஜூலை 30-திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.எம்.பி நகரில் பாரம்பரிய கும்மியாட்டம் நடைபெற்றது.. பவளக்கொடி குழுவினரின் 50 ஆவது பொன் விழா முன்னிட்டு அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆறு வயது குழந்தைகள் முதல் 60 வயது முதியோர்கள் வரை கும்மியாட்டம் ஆடினர்.. இந்த பவளக்கொடி குழுவின் கும்மியாட்டத்தில் சுமார் 2000 பெண்கள் மற்றும் 200 ஆண்கள் கலந்து கொண்டு கும்மியாட்டத்தை ஆடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்..
மேலும் இது குறித்து பவளக்கொடி தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் கூறுகையில்:
கொங்கு மண்டலம் மண் நின்னுடைய பாரம்பரிய கலையான மண்ணிர்க்கு உரிய கிராமிய கலை கும்மியாட்டம் இது தற்போது அழிந்து வருகிறது., இந்த அழிவின் விளிம்பிலிருந்து மீட் வருவதற்காக இளைய தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல நோக்கமாக, வேள்வியாக முயற்சித்து, இந்நிகழ்ச்சியின் மூலமாக கொண்டு செல்கிறோம், இந்த நிலையில் நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம்,இதுவரை, ஐம்பது குழுக்களுக்கு பயிற்சி அளித்து
இன்று 50ஆவது பொன்விழா அரங்கேற்ற நிகழ்ச்சி தாராபுரம் என்.எம்.பி நகரில் நடைபெற்றது, 6 வயது குழந்தைகள் முதல் 60 வயது முதியோர்கள் வரை பயிற்சி பெற்று இன்று அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் 2000 பெண்கள் மற்றும் ஆண்கள் தாராபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு உண்டான பெண்கள் ஆண்கள் இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கும்மி ஆட்டத்தை ஆடி தங்களது திறமைகளை வெளியில் நடத்தியது பார்ப்பதற்கு பெருமையாக இருந்தது.. இந்த கும்மியாட்ட நிகழ்ச்சியை பார்த்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் எங்களுக்கு வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் தெரிவித்தனர்..
மேலும் இந்த மண் சார்ந்த பாரம்பரிய கலையை நாங்கள் தமிழகம், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டுமே எங்களது நோக்கம்., தமிழக அரசின் அனுமதியோடு நாங்கள் அரசு பள்ளிகளிலும் இந்த கலையை கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறோம் என்று கூறினார்.
No comments:
Post a Comment