திருப்பூர் மாநகராட்சியில் சுகாதாரம் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளையும் நான்கு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்த நிலையில். திருப்பூர் மாநகராட்சியில் சுகாதார பிரச்சனை தலையாய பிரச்சனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குப்பைகள் மலை மலையாக வந்து குவிந்த வண்ணம் இருக்கும் நிலை உள்ளது. இந்த குப்பைகளை குப்பை கிடங்குகளில் கொண்டு போய் சேர்ப்பதற்கு மாநகராட்சி வாகனங்கள் பற்றாத நிலையில் தனியார் டிப்பர் வாகனங்களை எடுத்து வாடகைக்கு எடுத்து குப்பைகளை அள்ள வேண்டிய நிலைமை உள்ளது மாநகராட்சிக்கு குப்பைகளை அழிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டல அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களின் தலைமையில் ஒன்றாவது மண்டலம் மற்றும் நான்காவது மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஒன்றாவது மண்டலம் மற்றும் நான்காவது மண்டலத்தில் உள்ள வார்டுகளில் தினசரி நடைபெறும் சுகாதார பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப , துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் , நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாபன், ஒன்றாவது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம் , ஒன்றாவது மண்டலம், மற்றும் நான்காவது மண்டலம் உட்பட்ட மாமன்ற உறுப்பினர்களும் மற்றும் மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment