வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக தமிழ் மொழி கற்போம் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி துவக்கி வைத்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 July 2023

வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக தமிழ் மொழி கற்போம் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி துவக்கி வைத்தார்

 


வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக தமிழ் மொழி கற்போம் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி துவக்கி வைத்தார் திருப்பூரில் பல லட்சக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள் அவர்கள் தமிழ் மொழியில் கல்வி கற்க வேண்டி தமிழ் மொழி கற்போம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாநகராட்சி ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ் மொழி கற்போம் திட்ட துவக்க விழா நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வட மாநில குழந்தைகளுக்கு 170 பேருக்கு தமிழ் கல்வி பாட புத்தகங்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்தில் வசித்து வரும் நபர்களை நமது சகோதரர்களாக நடத்த வேண்டும் வெளிமாநில தொழிலாளர்களின் பிள்ளைகள் நமது தமிழ் மொழி கல்வியை கற்பதில் மிகுந்த மகிழ்ச்சி திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள வெளி மாநில குழந்தைகள் அவர்கள் தாய்மொழி இந்தி மொழியாக இருந்தாலும் தெலுங்கு மொழியாக இருந்தாலும் கன்னட மொழியாக இருந்தாலும் நமது மாநிலத்தில் கல்வி கற்பது பாராட்டுக்குரியது அவர்களுக்கு தமிழ் மொழி கற்பிப்பதில் பெரும் முயற்சி எடுத்து வரும் ஆசிரியர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார் மேலும் இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா , ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் டாக்டர் மா ஆர்த்தி இஆப , மாவட்ட ஆட்சியர் தா.கிருஸ்துராஜ் இஆப, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இஆப, கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள் கலந்து கொண்டனர் 

மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad