மூன்று நாள் ரேஷன் கடை வாரம் ஆறுநாள் திறக்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 July 2023

மூன்று நாள் ரேஷன் கடை வாரம் ஆறுநாள் திறக்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மூன்று நாள் ரேஷன் கடை வாரம் ஆறுநாள்  திறக்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டலம் 13 வது வார்டு அனுப்பர்பாளையம் புதூர் அடுத்து உள்ள டி டி பி மில் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது ஊழியர் பற்றாக்குறை காரணமாக கடந்த பல மாதங்களாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்படுவதாக கூறப்படுகிறது இதனால் பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் ரேஷன் கடையில் முழு நேர ஊழியர்களை நியமிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார் கட்சி மூத்த நிர்வாகி சுப்பிரமணியம் நகரச் செயலாளர் நந்தகோபால் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள் அப்போது ரேஷன் கடையை தினமும் திறந்து பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதுடன் முழு நேர விற்பனையாளர், உதவியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட  ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர் 



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad