திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி சிறுமி பலி தாய் படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல் தஞ்சாவூரை சேர்ந்தவர் ஜெயராஜ் ( 42) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு மகன் சஞ்சய் (17) மகள் திவ்யதர்ஷினி (7) என்ற குழந்தைகள் உள்ளன இவர்கள் விஜயபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர் ராஜேஸ்வரி பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார் மகள் திவ்யதர்ஷினி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார் இந்த நிலையில் நேற்று மாலை ராஜேஸ்வரி தனது மகள் திவ்யதர்ஷினி உடன் ஸ்கூட்டரில் விஜயபுரத்தில் இருந்து திருப்பூருக்கு காங்கேயம் ரோடு நல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர் அப்போது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ராஜேஸ்வரி ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது இதில் ராஜேஸ்வரியும் அவருடைய மகளும் தூக்கி வீசப்பட்டனர் அப்போது அவர்கள் இரண்டு பேர் மீதும் போலீஸ் வாகனம் சக்கரம் ஏறியதால் இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி திவ்யதர்ஷினி ரத்த வெள்ளத்தில் பலியானார் ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ராஜேஸ்வரியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வாகனத்தை ஒட்டி வந்த ஊர்க்காவல் படை சேர்ந்த காவலர் வீர சின்னன் (35) என்பவரை பொதுமக்கள் பிடித்து தாக்கினார்கள் அப்போது பொதுமக்கள் ஊர் காவல் படை காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் வனிதா நல்லூர் உதவி கமிஷனர் நந்தினி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலீசார் மாணவியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இந்த விபத்தால் இந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்
No comments:
Post a Comment