கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி ரோட்டில் தாசநாயக்கன்பட்டி அருகே தனியார் டெக்ஸ்டைல் மில் உள்ளது . இந்த மில்லில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர் தொழிலாளர்களுக்கான குவாட்டர்ஸ் அதே பகுதியில் உள்ளது. ஒடிசா மாநிலம் சாந்தாமாஜி என்பவர் குடும்பத்துடன் குவாட்டர்ஸ்ஸில் தங்கிவேலை செய்து வருகிறார. மதிய உணவு வேளையில் சாந்தாமாஜி வீட்டுக்கு சென்றபோது அவரது மூன்று வயது சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்று பக்கத்து வீட்டு சிறுவனுடன் விளையாடினான். அப்போது அங்கு இருந்த கழிவு நீர் தொட்டி மீது ஏறி இருவரும் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென தொட்டி மூடி உடைந்து இருவரும் கழிவு நீர் தொட்டியில் விழுந்தனர். அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக இருவரையும்மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தாமாஜியின் 3 வயது மகன் உயிரிழந்து விட்டதாக கூறினர். மற்றொரு சிறுவனுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த சிறுவனின் பிணம் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தாராபுரம் அலங்கியம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment