திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல அதிகாரிகள் அலட்சியப் போக்கு இந்த பெருங்குழியில் பொதுமக்கள் விழுந்து ஆபத்து ஏற்படும் முன் குடிநீர் குழாய் வேலையை முடிப்பார்களா? திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் ரோட்டில் ( 10 வது வார்டு) திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் சார்பில் குடிநீர் குழாய் பழுது காரணமாக தோண்டப்பட்டு வேலை செய்தார்கள் இந்த வேலை சரிவர செய்யாததால் மீண்டும் குழாயில் கசிவு ஏற்பட்டது மீண்டும் அதை சரி செய்ய அந்த இடத்தில் குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் குடிநீர் குழாய் பழுது வேலை நடக்கவில்லை இந்த ரோட்டில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பொதுமக்கள் பயணிக்கும் முக்கியமான ரோடு ஆகும் இந்த ஆழமான குழியில் குழந்தைகள், வாகன ஓட்டிகள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது குழியை சுற்றி எந்த ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை பதாகைகள் வைக்கவில்லை மாநகராட்சி ஒன்றாவது மண்டல அதிகாரிகள் இது போன்ற வேலைகளுக்கு குழி தோண்டி முடித்தார்களா குழியை மூடினார்களா என்று பார்வையிடுவது இல்லை யாராவது புகார் செய்தால் மட்டுமே சில நாட்கள் கழித்து அந்த வேலையை முடிப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் ,பொதுமக்கள் கூறுகின்றனர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
அகாஜாமைதீன்
No comments:
Post a Comment