தாராபுரம் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ராக்கிங் தடுப்பு பற்றி சட்ட விழிப்புணர்வு நடைபெற்றது இதில் நீதிபதி பங்கேற்பு..
தாராபுரம், மாண்பமை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவு படி தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரியில் ராகிங் தடுப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் விக்டர் லாரன்ஸ் வரவேற்றார்.தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி திரு.தர்மபுரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு ராகிங் செய்படுவதால் ஏற்பம் விளைவுகளையும், அதற்காக இயற்றப்பட்ட சட்டத்தையும் மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல முறையில் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என கூறினார் வழக்கறிஞர் சித்ரா பாண்ட்ஸ் பேசுகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் படித்து எல்லா இடங்களிலும், வேலை பார்க்கின்றனர் ஆகவே அனைவரும் படிக்க வேண்டிய வயதில் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார் வழக்கறிஞர் சங்க தலைவர் கலைச்செழியன் அவர்கள் பேசுகையில் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதத்தில் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார் தாராபுரம் நகராட்சி 22 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் நாகராஜன் பேசுகையில் இன்றைய தலைமுறையினர் பூமியை பாதுகாக்க முயற்சி கொண்டு மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து குப்பைகளை எல்லா இடங்களிலும் கொட்டாமல் அதற்கு உரிய இடத்தில் கொட்ட வேண்டும் என அறிவுரை கூறினார் மேலும் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜேஷ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்..
No comments:
Post a Comment