அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது திருப்பூர் செட்டி தோட்டம் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்
திருப்பூர் புறநகர் மாவட்ட தலைவர் நெல்லை ஜி.பி.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் , மத்திய குழு உறுப்பினருமாகிய தேளி.க.காளிமுத்து சிறப்புரை ஆற்றினார் .
மாவட்ட இணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் ராமர்,
மாவட்ட துணை தலைவர் லட்சுமணன் ,தனசேகர்,வெள்ளத்துரை, துணை செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள( இந்தியா அணி) அணியில் இணைந்து செயலாற்ற முடிவெடுத்து பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு அளித்த தேசிய பொதுச்செயலாளர் ஜி தேவராஜன் அவர்களுக்கும் கட்சியின் தேசிய தலைமைக்கும் இந்த கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது ,மேலும் திருப்பூர் மாநகரப் பகுதிகளும் மாநகரத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள் குறிப்பாக காலை மாலை வேலைகளில் போதிய அளவு இல்லாததால் பனியன் தொழிலாளர்களும் ,பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் பொது மக்களும் கடும் அவதிப்படுகின்றனர். திருப்பூர் மாநகரம் , திருப்பூர் கிராமப்புற பகுதிகள் முழுவதும் காலை ,மாலை வேளைகளில் பேருந்து வசதியை அதிகபடுத்த வேண்டும் என தமிழக அரசிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கோரிக்கை வைக்கிறது. தற்போது தக்காளி, வெங்காயம் ,காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கேட்டுக் கொள்கிறது , அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் நகரப்புறங்களில், கிராமப்புறங்களில் தீவிரமாக செயல்பட்டு அதிகளவில் உறுப்பினர் சேர்க்க பாடுபடு வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணகுமார், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசர் , மாணவரணி மாவட்ட செயலாளர் பிரபு, கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் அழகு பாண்டி அரசப்பன், தகவல் நுட்பம் அணி மாவட்ட செயலாளர் மொக்க மாயன், அவிநாசி ஒன்றிய செயலாளர் தேவராஜ், பல்லடம் ஒன்றிய செயலாளர் சிலம்பரசன், காங்கேயம் ஒன்றியம் செயலாளர் லோகேஸ்வரன் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment