மணிப்பூர் பெண்மணிகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தையும் கலவரத்தையும்
கண்டுகொள்ளாத பிரதமரையும் கண்டித்தும், மணிப்பூர் அரசை கலைக்க கோரியும், சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! இந்திய நாட்டையே உலுக்கிய இந்திய (மணிப்பூர்) மகள்களுக்கு இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தப்பட்ட மணிப்பூர் கொடுமையை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்திற்கும் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி இந்த கொடூரங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் இதை கண்டித்தும் , மணிப்பூர் அரசை கலைக்க கோரியும், திருப்பூர் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த கோரியும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படுத்த கோரியும் கோசங்கள் எழுப்பப்பட்டது, இந்த ஆர்ப்பாட்டத்தில் பாத்திர சங்க துணைச் செயலாளர் என் குபேந்திரன் ,(சிபிஎம்) நகர குழு உறுப்பினர் சுகுமார், பாத்திர தொழிற்சங்க முன்னாள் செயலாளர் குப்புசாமி, முன்னாள் நகர செயலாளர் பி சுப்பிரமணியம், (சிபிஎம்) ,நகரச் செயலாளர் நந்தகோபால், ( சிபிஎம்) நகர குழு உறுப்பினர் எ.ஆறுமுகம் நன்றியுரை நிகழ்த்தினார், ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment