தாராபுரத்தில் தனியார் கல்லூரி நாட்டு நலத் திட்டம் சார்பாக மரம் நடு விழா நடைபெற்றது..
தாராபுரம், ஜுலை 21-திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காலேஜ் சாலையில் மிகவும் பிரபலமான பிஷப் தார்ப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட இருப்பாளர்களும் படித்து வருகின்றனர்.. இந்தக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட குழு(NSS) சார்பாக மரம் நடுவிழாவில் 300-க்கும் மேற்பட்ட அரச மரம் புங்கை நிலவேம்பு போன்ற மரக்கன்றுகளை நட்டு வைத்து மாணவர் மாணவிகளுக்கு கருத்துரை வழங்கினார்கள்...
நமது நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்புகண்ணன்
நகர கழக செயலாளர் பொறியாளர் முருகானந்தம்,
உடன் 22 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் நாகராஜன் கல்லூரி முதல்வர் விக்டர் லாஜஸ்,
கல்லூரி துணை முதல்வர் பிரேம்நாத் நாட்டு நலப்பணித் திட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்,துணை ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலினா பிரபா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment