மணிப்பூர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கலவரத்தை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க கோரி விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது என்றும் கலவரம் பற்றி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்ககோரியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் திருப்பூர் மங்கலம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் திருப்பூர் தெற்கு மாவட்ட பொது செயலாளர் ஜீனத் தலைமை தாங்கினார், மங்கலம் ஊராட்சி மன்ற ஆறாவது வார்டு உறுப்பினரும், எஸ் டி பி ஐ கட்சியின் நிர்வாகியுமான ராபியத்துல் பஷிரியா வரவேற்புரை நிகழ்த்தினார் விமன் இந்தியா மூமெண்ட் அமைப்பின் திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் ஷாஹின் பாத்திமா, எஸ் டி பி ஐ திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மன்சூர் அஹமத், பல்லடம் தொகுதி தலைவர் யாசர் அரபத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சஹானா, எஸ்டிபிஐ கட்சி யின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ்பாபு, ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் மகளிர் அணி மாநில செயலாளர் கௌசல்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் முபினா நன்றியுரை ஆற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்தவும் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கவும், பெண்களை பாதுகாக்கவும் தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பப்பட்டது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment