பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு 15 வேலம்பாளையம் மண்டலம், 14வது வார்டு சார்பாக மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் பாரதிய ஜனதா கட்சி வடக்கு 15 வேலம்பாளையம் மண்டலம் 14 வது வார்டு சார்பாக ஆத்துப்பாளையம் ரோடு அனுப்பர்பாளையம் ரேஷன் கடை அருகில் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வார்டு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் அன்னை குமார்,மண்டல செயலாளர் சதீஷ்குமார், மண்டல துணைத் தலைவர் ராதாமணி, மண்டல இளைஞரணி தலைவர் கதிர், ரமேஷ் குமார், சக்திவேல், காளிமுத்து உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தவும், டாஸ்மார்க் கடைகளை மூடவும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டவும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும், மத்திய அரசின் நலத்திட்டங்களை தடுத்திடாமல், அதில் ஊழல் செய்யாமல் இருக்கவும், பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டியும், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், மின்வெட்டை தவிர்க்கவும் மின்கட்டணத்தை குறைக்கவும், கோயில்களை இடிக்காமல் இருக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முழக்கமாக வைத்தனர். இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment