தாராபுரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக உழவர் தியாகிகள் தின மாநாடு நடைபெற்றது..
தாராபுரம், ஜூலை06- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சந்திராபுரம் நாச்சிமுத்து கவுண்டர் திருமண மஹாலில் உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக ஜூலை 5ஆம் தேதி இன்று உழவர் தியாகிகள் தின மாநாடு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் சொல்லேர் உழவன்
செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் முன்னாள் சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக திருப்பூர் புறநகர் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிபி கந்தசாமி பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்பி கே பி ராமலிங்கம் ஆகியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல தீர்மானங்களை முன்வைத்து நிறைவேற்றப்பட்டது.. 500க்கும் மேற்பட்ட விவசாயிகள்,பாஜக,அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....
No comments:
Post a Comment