மின்கட்டண உயர்வு போராட்டத்தில் உயிரிழந்த விவசாய தியாகிகளுக்கு அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது, திருப்பூர் மாவட்டம்,
பல்லடம், கே. அய்யம்பாளையத்தில் கடந்த 1972ம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் மின் கட்டணத்தை உயர்த்தியது இந்த மின் கட்டணத்தை எதிர்த்தும், குறைக்க கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்தப் போராட்டத்தை அடக்கும் விதமாக அப்போதைய அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த விவசாய தியாகிகள் N. முத்துக்குமாரசாமி மற்றும் A.R. சுப்பையன் ஆகியோருக்கு அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு.G.k. விவசாயமணி (எ) G. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்திந்திய விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் அனைத்து அணி நிர்வாகிகளும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment