அதிமுக மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர், பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சி மகேந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த அ.இ. அ. தி. மு. க சார்பில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வையும், அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுவதையும், கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும், இவைகளை எல்லாம் கண்டு கொள்ளாத முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கருத்தில் கொள்ளாமல் இருப்பதை கண்டித்தும் திருப்பூர் ஒருங்கிணைந்த அனைத்திந்திய கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது நாளை 20/07/2023 அன்று காலை 10 மணியளவில், திருப்பூர் குமரன் சிலை அருகில்நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டத்தை சார்ந்த மாவட்ட கழக நிர்வாகிகள்; ஒன்றிய கழக, நகர கழக, பேரூராட்சி கழக செயலாளர்கள் - நிர்வாகிகள்; சார்பு அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள்- நிர்வாகிகள்; உள்ளாட்சி - கூட்டுறவு சங்க பிரதிநிதிகள்; தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment