பல்லடம் அறிவொளி நகரில் மணிப்பூர் கலவரம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து அனைத்து அரசியல் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் நடைபெறும் மிகப்பெரிய கலவரத்தையும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும் கண்டித்தும் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் அனைத்து அரசியல் கட்சியின் சார்பில் கலவரத்தையும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும் தடுக்க தவறிய பாஜக அரசு பதவி விலக கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் எஸ்.சாகுல் ஹமீது தலைமை ஏற்றார். திமுக அறிவொளி நகர் 1வது செயலாளர் ரவி வரவேற்புரை நிகழ்த்தினார்,எஸ் டி பி ஐ கட்சி பல்லடம் தொகுதி துணை செயலாளர் எம்.லியாக்கத்அலிகான் கன்டன கோஷங்களை எழுப்பினார், அனைத்து கட்சி நிர்வாகிகள் , ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளரும், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவரும் ஆகிய இ. பாலசுப்பிரமணியம், பல்லடம் காங்கிரஸ் வட்டார தலைவர் எஸ்.கணேசன், AITUC மாநில செயலாளர் என்.சேகர், எஸ் டி பி ஐ கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஹரிஸ்பாபு, மனிதநேய மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் எம் .ஜே. அபுசாலி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர், மாவட்ட கவுன்சிலர், கரைப்புதூர் ராஜேந்திரன், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எ. முஜிபுர் ரஹ்மான் நன்றியுரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊடக அணி தலைவர் சர்வர் பாஷா, பல்லடம் தொகுதி பொருளாளர் நாசர், எஸ்டிபிஐ கட்சியின் அறிவொளி நகர் Ex - 2 வது வார்டு உறுப்பினர் ஜமீலா , எஸ் டி பி ஐ கட்சியின் அறிவொளி நகர் கிளை தலைவர் சதாம் உசேன், குருவாயூரப்பன் கிளை செயலாளர் ஆரிஸ் பாபு, பல்லடம் பெரிய பள்ளி கிளை தலைவர் சல்மான், அண்ணா நகர் கிளை பொறுப்பாளர்கள் ஜாபர், அன்வர், எஸ்டிபிஐ கட்சியின் அறிவொளி நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மணிப்பூர் மக்களுக்காகவும் பாஜக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை முழங்கினார்கள்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment