அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உழவர் தியாகிகள் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது 1970 ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை அரும்பாடு பட்டு உயிர் நீத்த விவசாய தியாகிகள் நினைவாக திருப்பூர் கொங்கு நகரில் உள்ள அனைத்து இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் உழவர் தியாகிகள் தின பொதுக்கூட்டம் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கி எழுச்சியுரையாற்றினார் தலைமை ஆலோசகர் எஸ்.சென்னியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார் மாநில அமைப்பாளர் தடா கே. ஆறுமுகம் வீரவுரையாற்றினார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உரையாற்றினார்கள் இறுதியில் 31 வது வார்டு துணைத் தலைவர் கர்ணன் நன்றியுரை ஆற்றினார் இந்த கூட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 4000 -நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு ரூ 4000 வழங்க வேண்டும், நதிகளை தேசிய மயமாக்க வேண்டும், நதிநீர் இணைப்பை விரைவாக கொண்டு வர வேண்டும், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், கல் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும், பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 58 வயது நிரம்பிய அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு வைக்கப்பட்டது இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட மாநகர நகர ஒன்றிய பேரூராட்சி மண்டல ஊராட்சி வார்டுகளில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்கள் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment