திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் குடிநீர் பணிகளுக்கு பூமி பூஜை தெற்கு தொகுதி எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெற்றது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,
திருப்பூர் மாநகராட்சி 15-வேலம்பாளையம் பகுதியில் இருந்து மூன்றாவது குடிநீர் திட்டத்தின் வாயிலாக இராக்கியாபாளையம் ராசாத்தா கோவில் அருகில் உள்ள நீர் நிலைத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகளை,வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் MLA அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாநகர திமுக செயலாளரும் மாண்புமிகு திருப்பூர் மாநகராட்சி மேயருமான ந.தினேஷ்குமார், திருமுருகன்பூண்டி நகர கழக செயலாளர் மூர்த்தி (எ) கிருஷ்ணசாமி, திருமுருகன்பூண்டி நகர மன்ற தலைவர் நா.குமார், திருப்பூர் மாநகராட்சி 1-ம் மண்டலத் தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பூண்டி நகர துணை செயலாளர் மூர்த்தி, நகர மன்ற துணை தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment