தாராபுரம் அருகே 8லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம ஆசாமிகள். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 September 2023

தாராபுரம் அருகே 8லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம ஆசாமிகள்.


தாராபுரம் அருகே 8லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம ஆசாமிகள்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தொழிலதிபரின் காரில் இருந்து ரூ.8 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:- தொழிலதிபர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த துலுக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). தொழிலதிபர். தாராபுரத்தில் லாரி டிரான்ஸ் போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தாராபுரம்- பழனி சாலையில் தேர்பட்டி பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டுமான பணிகளுக்காக பணம் தேவைப்பட்டதால் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தாராபுரம்- பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.8 லட்சம் கடன் பெற்றார்.

பின்னர் அந்த பணத்தை காரின் டிக்கியில் வைத்து கொண்டு தாராபுரத்தில் இருந்து வீட்டின் கட்டுமான பணியை பார்வையிடுவதற்காக தேர்பட்டிக்கு வந்தார். அங்கு வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டு கட்டுமான பணிகளை பார்வையிட சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர் வந்து காரில் உள்ள பணத்தை எடுக்க கார் டிக்கியை திறந்த போது பையில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலங்கியம் போலீசில் புகார் கொடுத்தார்.

இது குறித்து பாண்டியன் கூறுகையில், " என்னை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் காரில் வைத்திருந்த ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்து வேறு ஒருவர் வேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றதாக" தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.வீட்டின் கட்டுமான பணிகளுக்காக நகையை அடமானம் வைத்து கடன் பெற்று வீட்டின் கட்டுமான பணியை செய்து வந்தவரிடம் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad