சேவ் மற்றும் அர்விந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்! திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் பத்தாவது வார்டு ஸ்ரீ கருப்பராயன் கோவில் மண்டபத்தில் சேவ் - திருப்பூர் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர் இந்த முகாமை பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு துவக்கி வைத்தார். இந்த முகாமில் ஏழை எளிய மக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதிக்கப்பட்டது மேலும் கிட்ட பார்வை தூரப்பார்வை வெள்ளெழுத்து போன்ற பார்வை கோளாறு இருப்பவர்களுக்கு தகுந்த பரிசோதனை செய்யப்பட்டு முகாம் நடத்தும் இடத்திலேயே குறைந்த விலையில் தரமான கண் கண்ணாடி வழங்கப்பட்டது. மேலும் கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் அன்று மதியமே கோயமுத்தூர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஐஓஎல் லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் கோயம்புத்தூர் சென்று வர போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கண் சிகிச்சை முகாம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தெரியும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்த முகாமை சேவ்- திருப்பூர் அமைப்பினர் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் இந்த நிகழ்வில் 10 வது வட்ட கழக செயலாளர் சசிகுமார், பிரதிநிதி ஐயப்பன், மீனவரனி ஆறுச்சாமி, பழனிச்சாமி, விஜய்,நவீன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment