திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் குடிபோதையில் வாலிபர் செல்போன் டவர் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் பரபரப்பு! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 September 2023

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் குடிபோதையில் வாலிபர் செல்போன் டவர் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் பரபரப்பு!


திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் குடிபோதையில் வாலிபர் செல்போன் டவர் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் பரபரப்பு! 


திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் பிரவீன் (வயது 27) இவருடைய வணிக வளாக கட்டிடத்தின் மேல் செல்போன் டவர் உள்ளது  அனுப்பர்பாளையம் காயத்ரி நகர் 1வது வீதி பகுதியில் வசிக்கும் கடலூரைச் சேர்ந்த கணேஷ் என்பவருடைய மகன் பலராம்  (எ) சிவா (வயது 35) குடிபோதையில் பிரவினுடைய கட்டிடத்தில் உள்ள செல்போன் டவரில் நேற்று (10-9-2023) மாலை நாலு மணி அளவில் ஏறி உச்சியில் நின்று கொண்டு தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும் நீட் தேர்வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தார் இதை கண்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துவிட்ட நிலையில்  தகவல் அறிந்த 15 வேலம்பாளையம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ‌ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மேலும் குமார் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இந்த நபரை மீட்க்கும் பணியில்  ஈடுபட்டனர். டவரின் உச்சியில் இருந்து குதிக்க முயற்சிக்கும்  அந்த நபரை  காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மைக் மூலம் சமாதானப் படுத்தினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு    அந்த நபரின் உடம்பில் கயிற்றை சுற்றிய பொழுது அதை கழட்டி எறிந்து விட்டார் அந்த நபர். மீண்டும் நீண்ட நேரம் போராடி தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டாவது முறை அந்த நபரின் உடம்பில் கயிற்றை கட்டினார்கள். இந்த முறை அந்த நபர் எவ்வளவு முயற்சித்தும் கயிற்றை கழட்ட முடியாத அளவிற்கு  இறுக்கி  அந்த நபரை இழுத்து பிடித்து உடனடியாக  தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பிறகு சிறிது சிறிதாக அந்த நபரை டவரில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர்  பாதுகாப்பு பணியில் இருந்த 15 வேலம்பாளையம் காவல் துறையினர் உடனடியாக அந்த நபரை ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இரவு7-30 மணியளவில் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது அந்த நபரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கும் , எந்த சிறு அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாப்பு அளித்த15  வேலம்பாளையம் காவல் துறையினருக்கும்  பாராட்டுகளை தெரிவித்தனர் .


மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad