சவமாக்கும் சவர்மா ஃபாஸ்ட் ஃபுட் பிரியர்களே உசார் ! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 September 2023

சவமாக்கும் சவர்மா ஃபாஸ்ட் ஃபுட் பிரியர்களே உசார் ! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு


சவமாக்கும்  சவர்மா ஃபாஸ்ட் ஃபுட் பிரியர்களே உசார் ! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு! களத்தில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறையினர். நாமக்கல்லில் கடந்த 16ஆம் தேதி தனியார் ஹோட்டலில் சுஜாதா என்ற பெண் தங்களுடைய குழந்தைகளுடன் சவர்மா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட்ட நிலையில் இவருடைய மகள் கலையரசி என்கின்ற 14 வயது பள்ளி மாணவி இறந்துவிட்டார். இது பொது மக்களை அதிர்ச்சி கொள்ளாக்கியது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் பாஸ்புட் உணவகங்களில் சோதனையிட்டு வரும் நிலையில்,   திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் திருப்பூர் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சவர்மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொடியம்பாளையம் பகுதியில் உள்ள உணவகங்களில் நடத்திய ஆய்வில் கெட்டுப் போன சிக்கன் 42 கிலோ மற்றும் பழைய  11 கிலோ புரோட்டா மாவு மற்றும் மசாலா பொருட்கள் மூன்று கிலோ , மைனஸ் என்னும் கலவைப் பொருள் இரண்டு  கிலோ ஆகியவற்றை உடனடியாக பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது மேலும் தீவிர விசாரணை நடத்தி சுகாதாரம் இல்லாமல் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வந்த 13  உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 17,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது .மேலும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது : திருப்பூர் மாவட்டம் முழுவதும் சவர்மா கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் சவர் மா தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றவர்களிடம் மட்டுமே கோழி இறைச்சி போன்ற மூலப்பொருட்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும், இறைச்சி மற்றும் இதர மூலப்பொருட்கள் வாங்கியதற்கான பில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் யாராவது இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் சவர்மா தயாரித்து விற்பனை செய்தால் அவர்கள் கடைக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சீல் வைக்கப்படும் என்றும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் சவர்மா போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது அது தரமானதாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து உணவுப்பொருட்களை வாங்க வேண்டும், எந்த ஒரு உணவுப் பொருட்கள் வாங்கும் போதும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் தரமற்ற உணவுப் பொருட்கள் பற்றி  94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார்களை அனுப்பலாம் கூறினார்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad