திருப்பூர் படியூருக்கு முதல்வர் வருகிறார் கூட்ட அரங்கை அமைச்சர் பார்வையிட்டார்!
வருகின்ற செப்டம்பர் 24 தேதி அன்று காங்கேயம் படியூரில் நடைபெற உள்ள BLA பாசறை கூட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமாகிய மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகை புரிவதை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் படியூர் பகுதியில் விழா நடைபெற உள்ள இடத்தை மாண்புமிகு வீட்டு வசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.
உடன் தொமுச மாநில துணைச் செயலாளரும் தெற்கு மாநகர செயலாளருமான டி. கே. டி .மு .நாகராசன் ,வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் , தெற்கு மாவட்ட செயலாளர் மண்டல தலைவர் இல பத்மநாபன் , தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாவட்ட அவை தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகி எஸ் திலக்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment