திருப்பூர் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் அமைச்சர்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தனர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 September 2023

திருப்பூர் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் அமைச்சர்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தனர்


திருப்பூர் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் அமைச்சர்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தனர்.


 திருப்பூர் மேற்கு மண்டல திமுக வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டம் திமுக தலைவரும்,மாண்புமிகு  முதல்வருமாகிய மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும்  திருப்பூர் மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டம் திருப்பூரை அடுத்த காங்கேயம் படியூரில் நடைபெற்றும் நிலையில் இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு சேலம் கிழக்கு சேலம் மேற்கு சேலம் மதியம் ஈரோடு வடக்கு ஈரோடு தெற்கு கரூர் கோவை மாநகர் கோவை வடக்கு கோவை தெற்கு நாமக்கல் கிழக்கு நாமக்கல் மேற்கு நீலகிரி ஆகிய 14 கழக மாவட்டத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் ஏழு வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த 50 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 14,411 பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பாசறை கூட்டத்தின் தொடக்கம் நிகழ்ச்சியாக கொடி ஏற்று விழா நடைபெற்றது.மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன்  திமுக கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  கயல்விழி செல்வராஜ், வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ்   தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல தலைவருமான இல, பத்மநாபன், திருப்பூர் தொமுச மாநில துணைச் செயலாளரும் தெற்கு மாநகர செயலாளருமா டி.கே.டி மு. நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும், மரியாதைக்குரிய மேயருமான தினேஷ் குமார் மற்றும் திமுக மாநில, மாவட்ட , மாநகர, அணி,ஒன்றிய திமுக நிர்வாகிகள்,  மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad