திருப்பூர் மாநகராட்சி 1 ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட சிபிஎம் கட்சியினர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 September 2023

திருப்பூர் மாநகராட்சி 1 ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட சிபிஎம் கட்சியினர்


திருப்பூர் மாநகராட்சி 1 ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட சிபிஎம் கட்சியினர். 


 திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 11 ஆம் வார்டு திலகர் நகர் பகுதியில் அனைத்து வீதிகளிலும் நான்காவது குடிநீர் திட்ட குழாய்களை பதிக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை பணி வீடுகளுக்கு தனியார் மீட்டர் குடிநீர் இணைப்பு பணி என ரோடுகளை தோண்டி ஒரு ஆண்டுக்கும் மேலாக குன்றும் குழியுமாக உள்ளது இதில் பயணிக்கும் பொது மக்கள் பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக வும் மேலும் இதில் வாகனங்கள் செல்லும் பொழுது மண் புழுதி பறந்து உடல் நல கோளாறு ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர் என்றும் இந்த அவல நிலை பற்றி கடந்த 18/7/2023 அன்று ஒண்ணாவது மண்டல துணை ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது அப்போது அதிகாரிகள் உடனடியாக சரி செய்வதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இரண்டு மாதங்கள் கடந்தும் இந்த ரோடுகள் சரி செய்யப்படவில்லை இதனால் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிபிஎம் கட்சியினர் பெண்கள் ஒன்னாவது மண்டல  மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஒன்னாவது மண்டல துணை ஆணையாளர் முருகேசன் மற்றும் உதவி பொறியாளர் ஒப்பந்ததாரர்கள் மற்றும் காவல் துறை ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மற்றும் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் ரங்கராஜ், நந்தகோபால், நவபாலன், சின்னச்சாமி, ஆறுமுகம், உமாநாத், ரகுபதி, கலாதரன், சாந்தி, ராம்கி, விஸ்வநாதன், குப்புசாமி, குபேந்திரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்  இந்த பேச்சு வார்த்தையில் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட ரோடுகளை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர். பிறகு சில மணி நேரம் கழித்து திலகர் நகர் பகுதியில் சாலைகளை சீர்படுத்தும் பணியை துவக்கினர். இதனால் இந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad