திருப்பூர் ஸ்மார்ட் பேருந்து நிலையத்தில் உள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்தும் இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். திருப்பூர் மாநகராட்சி முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பேருந்து நிலையத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்தும் இடத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப.,
துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment