திருப்பூரில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்புரை! திருப்பூர் தெற்கு மாநகர திமுக செயலாளரும், தொமுச மாநில துணைச் செயலாளருமான டி .கே. டி .மு. நாகராசன் தனது அறிக்கையில் திருப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக்கூட்டம் 09-09-2023 சனிக்கிழமை மாலை 6 மணி 36வது வார்டு, யூனியன் மில் ரோடு, ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் , கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளார்கள். இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட திமுக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச பேரவை நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் திமுக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் தெற்கு மாநகர கழக சார்பாக கேட்டுக்கொள்கிறேன். எனக் கூறியுள்ளார் . மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment