இஸ்ரேல் -- ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்த கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் !
இஸ்ரேல் ஹமாஸ் நாடுகள் 20 ஒரு நாட்களுக்கு மேலாக போர் புரிந்து வருகிறது இதில் 2500 குழந்தைகள் உள்பட 6500 அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் மேலும் மருத்துவமனைகள் குண்டு மழை பொழிந்து தகர்க்கப்பட்டது இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் கொல்லப்பட்டனர் மேலும் இந்த போரால் பெருமளவில் மாற்றுத்திறனாளிகள் உருவாவதை தடுத்திட உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று ஐநா சபைக்கு கோரிக்கை விடுத்தும் திருப்பூர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் புதூர் கோவை டிபார்ட்மென்ட் அருகில்
அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் , மாவட்டத் துணைச் செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை தலைவர் ரோசி, 15 வேலம்பாளையம் நகர செயலாளர் கமலக்கண்ணன் , 15 வேலம்பாளையம் நகர பொருளாளர் வர்கீஸ் , டி ஒய் எப் ஐ முன்னாள் நகர செயலாளர் நந்தகோபால் , சி ஐ டி யு ஆறுமுகம் , ஒன்றிய நகர செயலாளர் பாண்டியன் , மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment