திருப்பூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையம், மற்றும் ரேசன் கடை திறந்து வைத்தார்
தெற்கு எம் எல் ஏ. திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-2022 ன் கீழ் வார்டு - 51 தென்னம் பாளையம் பகுதியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையம் கட்டிடம் மற்றும் 56-வது வார்டு சந்திராபுரம் பகுதியில் ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளரும் மாண்புமிகு மேயருமான ந.தினேஷ்குமார் , தொமுச மாநில துணைச் செயலாளரும் , தெற்கு மாநகர செயலாளருமான டி கே டி மு.நாகராசன் , மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , துணை மேயர் ஆர் பாலசுப்ரமணியம் , பகுதி திமுக செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி, உசேன் , மாவட்ட துணை செயலாளர் டிஜிட்டல் சேகர் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சூர்யா , பகுதி அவைத் தலைவர் சுப்பிரமணியன் ,வட்ட திமுக செயலாளர் ஆனந்தன், தளபதி சேகர், மனோகரன் , மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment