பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6- ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
1992 டிசம்பர் முதல் வாரத்தில் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை கர சேவகர்களால் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களால் டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது திருப்பூர் காங்கயம் ரோடு சிடிசி கார்னர் பகுதியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்திட கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை எ. அபு பைசல் மாவட்ட தலைவர், வரவேற்புரை கே.ஹக்கீம் மாவட்ட செயலாளர், மற்றும் கண்டன உரை எ. ஹாலிதின் பொருளாளர் ஐ எம் எம் கே , ஐஸ் ஹவுஸ் இலியாஸ் தலைமை பேச்சாளர் ஐ எம் எம் கே, தோழர் சம்சீர் அஹமது மக்கள் ஒற்றுமை மேடை, மொளளவி எம் முஹமது யூசுப் ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு, இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய மக்கள் பெண்கள் குழந்தைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment