திருப்பூர் வடக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அயோத்தியில் இருந்த இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை கர சேவகர்களால் தரைமட்டமாக்கப்பட்டது இதை தொடர்ந்து நாடெங்கும் உள்ள இஸ்லாமிய மக்களால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாம் தேதியை பாபர் மசூதி தகர்ப்பு 31 ஆண்டு கால அநீதி பாசிச எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது
இதன் தொடர்ச்சியாக திருப்பூர் காங்கேயம் சாலை பிரிவு சிடிசி கார்னர் பகுதியில் டிசம்பர் 6 ல் திருப்பூர் வடக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை மாவட்ட தலைவர் வி .கே. என் பாபு
வரவேற்புரை மாவட்ட பொது செயலாளர் இதயத்துல்லா,
கண்டன உரையாற்றியவர்கள் எஸ்டிபி கட்சி மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, திருப்பூர் சுடலை ஒருங்கிணைப்பாளர் தமிழர் காவல் படை, உம்மு ஹபியா விம் இந்தியா மூவ்மெண்ட். மாவட்டத் தலைவர்.
மாவட்ட,தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் இறுதியாக
சதாம் உசேன் தெற்கு தொகுதி செயலாளர் நன்றி உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவில் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்களின் நினைவுச் சின்னங்கள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் இஸ்லாமியர்களின் தியாக வரலாறுகள் அழிக்க நினைக்கும் பாசிச சிந்தனையாளர்களை எதிர்த்து நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்.
No comments:
Post a Comment