சென்னையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது !
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் வடசென்னை, பெரம்பூர், வியாசர்பாடி, பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரூபாய் மூன்று லட்சம் மதிப்பிலான சேலை,லுங்கி,பெட்சீட், பிரட், ஜாம், பிஸ்கட், நாப்கின், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி,ரவை,சேமியா, பருப்பு, எண்ணெய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் சேத்துப்பட்டில் உள்ள பெருநகர் சென்னை திருநங்கைகள் காப்பகம் முகாம்களில் உள்ள திருநங்கைகளுக்கு 100 கிலோ அரிசி, 20 கிலோ பருப்பு, 20 லிட்டர் எண்ணெய், டீ தூள், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார்கள். இந்த நிவாரண பொருட்களை இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவரும் சமூக சேவகியுமான இந்திராசுந்தரம் அவர்கள் வீடு வீடாக சென்று வழங்கினார்கள். இந்த மனிதாபிமான உதவிகளுக்கு தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ராஜா முகமது , திருப்பூர் ரமேஷ் உறுதுணையாக இருந்தனர்.
No comments:
Post a Comment