திருப்பூர் தெற்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு விளக்க தெருமுனை கூட்டம்.
மக்களுக்கான அரசியல் கொள்கைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இந்திய அரசியல் பயணத்தில் எஸ்டிபிஐ ( இந்திய சமூக ஜனநாயக கட்சி ) செயல்பட்டு வருகிறது நாடு முழுவதும் பேரிடர் காலங்களில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு பொருட்கள், உடை கொடுத்து உதவிக்கரங்களை நீட்டி பாரபட்சம் இல்லாமல் சமூக பணிகளை செய்து வருகின்றது. எஸ்டிபி கட்சியின் வெல்லட்டும் மதச்சார்பின்மை என்ற கொள்கை முழக்கத்தோடு மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரையில் வருகின்ற ஜனவரி - 7 - 2024 ல் நடைபெறுகிறது . இதையொட்டி திருப்பூர் தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தாராபுரம் மற்றும் பல்லடம் பகுதிகளில் 24- 12 - 23 அன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment